ETV Bharat / international

ஈரான் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் மரணம்..

author img

By PTI

Published : Dec 15, 2023, 6:57 PM IST

Iran Police Station Attack: பிரிவினைவாத கும்பல் என்று சந்தேகப்படும்படியான சில மர்ம நபர்கள் கொண்ட கும்பல், இன்று அதிகாலை ஈரானில் உள்ள காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

gunmen-kill-several-people-injure-many-others-in-an-attack-on-a-police-station-in-iran-state-tv-says
ஈரான் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் மரணம்..

துபாய்: பிரிவினைவாத கும்பல் (Separatist Group) என சந்தேகப்படும் சில மர்ம நபர்கள் இன்று (டிச.15) ஈரானில் உள்ள காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த திடீர் தாக்குதலில் காவல்துறையினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பலர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தென்கிழக்கு ஈரானில் உள்ள காவல் நிலையம் மீது இன்று (டிச.15) சில மர்ம நபர்கள், திடீர் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் வாயிலாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில், பிரிவினைவாத கும்பல் என சந்தேகப்படும்படி இருந்த சில துப்பாக்கி ஏந்திய நபர்கள், திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இந்த பயங்கர தாக்குதலில் காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் துணை ஆளுநர் அலி ரெசா மர்ஹெமதி கூறுகையில், “இன்று அதிகாலை 2 மணி அளவில் ராஸ்க் நகரில் உள்ள காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காவல்துறையினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பலரைக் காவல்துறையினரும் கொன்றுள்ளனர்” என தெரிவித்தார். மேலும் அவர், “இந்த தாக்குதலுக்குப் பின்னால் பிரிவினைவாத குழுவான ஜெய்ஷ் அல்-அட்ல் மீது அரசு தொலைக்காட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த பிரிவினைவாத கும்பல் கடந்த 2019ஆம் ஆண்டு, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திக் காவல் படையைச் சேர்ந்த 27 உறுப்பினர்களைக் கொன்ற கும்பல் ஆகும்.

மேலும், சமீப காலமாகவே சன்னிகள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் இருக்கின்ற சிறு பிரிவினைவாத குழுக்கள் மற்றும் போராளிகள், அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியே இந்த காவல் நிலையத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை குற்றச்செய்திகள்: சிறையில் இருக்கும் இளைஞரை 3 ஆண்டுகளாகத் தேடிய போலீசார்..! மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.