ETV Bharat / international

நெருக்கும் நிதி நெருக்கடி - உணவு பொருட்களை வாங்க போராட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி!

author img

By

Published : Mar 27, 2023, 6:57 AM IST

நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தானின் இலவசமாக வழங்கப்படும் கோதுமை மாவு வாங்கச் சென்றவர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

லாஹூர்: கடும் நிதி நெருக்கடியால் அண்மைக் காலமாக பாகிஸ்தான் சிக்கித் தவித்து வருகிறது. நிதி நெருக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தியாவிடம் காஷ்மீர் பிரச்சினை குறித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட தூது விட்டது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து மானிய விலையில் எரிபொருள் உள்ளிட்ட பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு பல்வேறு முயற்சிகள் வீணாகின.

மேலும் அண்டை நாடுகளிடம் இருந்தும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தும் நிதி கேட்டு பாகிஸ்தான் முறையிட்டு வருகிறது. அடுத்த நாள் உணவு தேவையை தீர்க்க முடியாமல் மக்கள் பலர் கஷ்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு எரிபொருள் விலை, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் வானுயர்ந்த விலை காரணமாக அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே நிலவும் மின்சார தட்டுபாடு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை அந்நாட்டு மக்களை மேலும் துயரில் ஆழ்த்தி வருகிறது. பல்வேறு இடங்களில் வழங்கப்படும் இலவச கோதுமை மாவு மற்றும் தானியங்களை கொண்டு அன்றாட நாட்களை மக்கள் கழித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அப்படி இலவசமாக வழங்கப்படும் கோதுமை மாவை வாங்க பொது மக்கள் திரள்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கோதுமை மாவு பெற மக்கள் தங்களுக்குள் முண்டியடித்துக் கொள்கின்றனர். சில நேரம் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கிறது. முசாபர்பார்க் பகுதியில் உள்ள ஜடோய் நகரில் வழங்கப்பட்ட இலவச கோதுமை மாவை பெற மக்கள் முண்டியடித்துக் கொண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

அதேபோல் பாவல்பூர் மாவட்டத்தில் உள்ள இலவச கோதுமை மாவு விநியோக மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பஞ்சாப் மாகாணத்திலும் இலவசமாக கோதுமை மாவு விநியோகிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஓமனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகிறாரா ஜாகிர் நாயக்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.