ETV Bharat / international

கரோனா வைரஸூக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,200 பேர் உயிரிழப்பு

author img

By

Published : May 10, 2020, 12:29 PM IST

Updated : May 10, 2020, 2:41 PM IST

ஹைதராபாத்: உலகம் முழுக்க கரோனா வைரஸூக்கு 41 லட்சத்து ஓராயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக சீனாவில் கரோனா வைரஸ் உயிரிழப்புகள் இல்லை.

global covid19 tracker  coronavirus tally global  covid19 deaths worldwide  coronavirus cases global  கரோனா வைரஸ் உலகளாவிய நிலவரம்  கோவிட்-19 உலகளாவிய நிலவரம்  கரோனா வைரஸ் பாதிப்பு
global covid19 tracker coronavirus tally global covid19 deaths worldwide coronavirus cases global கரோனா வைரஸ் உலகளாவிய நிலவரம் கோவிட்-19 உலகளாவிய நிலவரம் கரோனா வைரஸ் பாதிப்பு

உலகெங்கிலும், கரோனா வைரஸ் தொற்று 41 லட்சத்து ஓராயிரத்து 641 பேரை பாதித்துள்ளது. இரண்டு லட்சத்து 80 ஆயிரத்து 435 பேர் உயிரிழந்துள்ளனர். 14 லட்சத்து 41 ஆயிரத்து 435 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

சீனாவில் கிட்டத்தட்ட 10 நாள்களுக்கு பிறகு இன்று புதிதாக இரட்டை இலக்க எண்களில் (14) பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் உள்நாட்டையும், இருவர் வெளிநாட்டையும் சேர்ந்தவர்கள்.

உள்நாட்டு பாதிப்பாளர்களில் 11 பேர் வடகிழக்கு மாகாணமான ஜிலினிலும், ஒருவர் ஹூபே மாகாணத்திலும் வசிக்கின்றனர். ஏறக்குறைய ஒரு மாதமாக சீனாவில் புதிய வைரஸ் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

நாடு முழுவதும் கோவிட்-19 க்கு சிகிச்சையளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆகக் குறைந்துள்ளது. 798 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அந்நாட்டில் 82 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நான்காயிரத்து 633 பேர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

தென் கொரியாவில் கடந்த 24 மணிநேரங்களில் 34 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, “அந்நாட்டில் 10 ஆயிரத்து 128 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் ஒன்பது ஆயிரத்து 610 பேர் மீண்டுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்ட 34 பேரில் 26 பேர் உள்நாட்டிலும், எட்டு பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்” என தெரியவருகிறது. கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகள் குறித்து பார்ப்போம்.

நாடுகள்பாதிப்புஇழப்பு
அமெரிக்கா13,47,30980,037
ஸ்பெயின்2,62,78326,478
இத்தாலி2,18,26830,395
இங்கிலாந்து2,15,26031,587
ரஷ்யா1,98,6761,827
பிரான்ஸ்1,76,65826,310
ஜெர்மனி1,71,3247,549
பிரேசில்1,56,06110,656
துருக்கி1,37,1153,739
ஈரான்1,06,2206,589

உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரத்து 745 புதிய பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். உயிரிழப்பு நான்காயிரத்து 200 ஆக உள்ளது.

இதையும் படிங்க: ஒரு வழியாக குறைந்த கரோனா பாதிப்பு: நிம்மதி பெருமூச்சுவிடும் சிங்கப்பூர்!

Last Updated : May 10, 2020, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.