ETV Bharat / international

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாதுகாப்பு அதிகரிப்பு!

author img

By

Published : Oct 17, 2020, 8:10 PM IST

இஸ்லாமாபாத்: லண்டனில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

sharifs-security-ramped-up-in-london
sharifs-security-ramped-up-in-london

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவிலிருந்து விலகக்கோரி, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தை தொடங்கியுள்ளன. இதில், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசிற்கு எதிராக தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டும், பிரதமர் பதவிலியிருந்து இம்ரான் கானை விலகக்கோரியும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், லண்டனில் தங்கியுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குஜ்ரான்வாலாவில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் (பி.டி.எம்) பேரணியில் வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றினார். அப்போது, இம்ரான் கான் அரசிற்கு எதிராக காரசாரமான கருத்துக்களை முன்வைத்து கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.

நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிளும் இனைந்து 11 பேர் அடங்கிய கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்(பிடிஎம்) நடத்திய முதல் பேரணி இதுவாகும். பிரதமர் இம்ரான் கானின் செய்தித் தொடர்பாளர் சாஹிப்ஸாதா ஜஹாங்கிர் தலைமையிலான பி.டி.ஐ ஆர்வலர்கள் ஸ்டான்ஹோப் பிளேஸுக்கு வெளியே பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளை ஏந்தி ஷெரீப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, நவாஸ் ஷெரிப்பிற்கு வழக்கமாக வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு, அதிகரிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.