ETV Bharat / international

ரகசியமாக காதலியைக் கரம்பிடித்த இங்கிலாந்து பிரதமர்!

author img

By

Published : May 30, 2021, 3:49 PM IST

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் காதலி ஹேரி சைமண்ட்ஸை ரகசியத் திருமணம் செய்துகொண்டார். இது இவருக்கு 3ஆவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

BorisJohnson, Secret Ceremony, Fiancee, Carrie Symonds, பிரிட்டன், பிரதமர், போரிஸ் ஜான்சன், ரகசிய திருமணம்
ரகசியமாக காதலியைக் கரம்பிடித்த இங்கிலாந்து பிரதமர்

லண்டன்: இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் (56) தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ் (33) உடன் 2018ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல், தம்பதியராக வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு 2020ஆம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் - ஹேரி சைமண்ட்ஸ் அறிவித்தனர். இச்சூழலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸை ரகசியத் திருமணம் செய்து கொண்டார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

BorisJohnson, Secret Ceremony, Fiancee, Carrie Symonds, பிரிட்டன், பிரதமர், போரிஸ் ஜான்சன், ரகசிய திருமணம்
மனைவியுடன் இங்கிலாந்து பிரதமர்

லண்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது.

இது போரிஸ் ஜான்சனுக்கு 3ஆவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் - ஹேரி சைமண்ட்ஸ் தம்பதியருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.