ETV Bharat / international

2022க்குள் ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள்: போரிஸ் ஜான்சன்

author img

By

Published : Jun 14, 2021, 1:54 AM IST

ஜி-7 மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏழ்மையான நாடுகளுக்காக 1 பில்லியன் (100 கோடி) தடுப்பூசிகளை அடுத்த ஆண்டின் இறுதிக்குள் வழங்க ஜி-7 கூட்டமைப்புத் தலைவர்கள் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

G7 to provide 1bn COVID vaccines to poor countries by end-2022, says UK PM
2022க்குள் ஏழை நாடுகளுக்கு 1 பில்லியன் தடுப்பூசிகள்: போரிஸ் ஜான்சன்

லண்டன்: ஏழை நாடுகளுக்கு 1 பில்லியன் தடுப்பூசிகள் வழங்குவது, உலகிலுள்ள அனைவருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பெரிய முன்னெடுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் தடுப்பூசி

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா இணைந்து தயாரித்த தடுப்பூசியின் பாத்திரத்தை இம்மாநாட்டில் குறிப்பிட்டு பேசினார். இந்தத் தடுப்பூசி இந்தியாவிலுள்ள சீரம் இன்ஸ்டியூட் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தடுப்பூசியின் மூலம் உலகில் அரை பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் போரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அஸ்ட்ராஜென்கா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் சுழிய லாபத்தில் தடுப்பூசியை தயாரிக்கிறது. அந்நிறுவனம், பல ஏழை நாடுகளுக்கு பல மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. சொல்லப்போனால், ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 96 விழுக்காடு விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் போரிஸ் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

காலநிலை மாற்றம்

இம்மாநாட்டின் மாலை நிகழ்வில், காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துகள் ஆதிக்கம் செலுத்தின. உலகளவில் வெளியாகும் கார்பன் அளவில் 20 விழுக்காடு கார்பனை இந்த ஜி-7 கூட்டமைப்பு நாடுகளே வெளியிடுகின்றன. இதுபோன்ற சூழலில், வருங்கால தலைமுறைக்காக பசுமையான உலகத்தை வைத்திருக்க கார்பன் வெளியிட்டு அளவை குறைக்கும் நடவடிக்கைகள் தொடங்குவதில் தாங்கள் தெளிவாக இருப்பதாக போரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை

உச்சிமாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில், ஜி-7 கூட்டமைப்பு தலைவர்களுக்கிடையேயான, தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவது, மீட்புத்திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை புதுப்பிப்பது, உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளுடன் கூட்டுறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஆறு உடன்படிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ஜி-7 மாநாடு: ஏழ்மையான நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்க முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.