ETV Bharat / international

பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு எதிராக லாகூரில் மாபெரும் மக்கள் பேரணி!

author img

By

Published : Dec 14, 2020, 9:13 PM IST

லாகூர் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக லாகூரில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் சார்பில் மக்கள் பேரணி நேற்று (டிச.13) நடத்தப்பட்டது.

பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு எதிரான லாகூரில் மக்கள் பேரணி!
பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு எதிரான லாகூரில் மக்கள் பேரணி!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் செய்துதான் இம்ரான் கான் வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. தொடர்ந்து, இம்ரான் கானின் அரசை ராணுவம் வழிநடத்துகிறது என்றும் ஊழல் மலிந்துவிட்டது என்றும் விமர்சித்து அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்திவருகின்றன.

இந்நிலையில், இம்ரான் கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி (பி.எம்.எல்-என்), ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்.) என்கிற கூட்டணியை கடந்த செப்டம்பர் மாதம் அமைத்தன.

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் சார்பில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு எதிரான லாகூரில் மக்கள் பேரணி!
பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு எதிரான லாகூரில் மாபெரும் மக்கள் பேரணி!

அதனடிப்படையில், நேற்று (டிச.13) கிழக்கு லாகூர் அருகே உள்ள மினார்-இ-பாகிஸ்தானில் 11 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த பேரணியில், ஜாமியத் உலமா இ இஸ்லாம் தலைவர் மெளலானா ஃபஸ்லூர் ரஹ்மான், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (பி.எம்.எல்-என்) துணைத் தலைவர் மரியம் நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கரோனா வைரஸ் காரணமாக பொதுக்கூட்டங்களுக்கு அரசு தடை விதித்த போதிலும், பல்லாயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் லாகூரில் அணிதிரண்டனர்.

இதையும் படிங்க : 42 ஐஎஸ் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ஈராக் ராணுவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.