ETV Bharat / international

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா... ஊரடங்கு அமல்...

author img

By

Published : Oct 26, 2021, 2:57 PM IST

சீனாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதால், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவக்கூடிய இடங்களைக் கண்டறியும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் அந்நாட்டிற்கு சென்ற சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள எஜின் நகரில் தொற்று பரவல் வேகமாக பரவிவருவதால், அங்குள்ள பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இதுதொடர்பாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைய உயர் அலுவலர் லியாங்யூ கூறுகையில், "உள்மங்கோலியா பகுதியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து 10க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.