ETV Bharat / international

சீனாவிலும் புதிய பாதிப்புகள், கரோனா வைரஸ் இன்றைய நிலவரம்!

author img

By

Published : May 8, 2020, 10:46 AM IST

ஹைதராபாத்: உலகளவில் கரோனா வைரஸால் 39 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்து 70 ஆயிரத்து 720 பேர் உயிர் இழந்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 44 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது.

global covid19 tracker  coronavirus tracker global  coronavirus tally worldwide  coronavirus cases global  கரோனா வைரஸ், உலகளாவிய நிலவரம், உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு, கோவிட்-19 பாதிப்பு
global covid19 tracker coronavirus tracker global coronavirus tally worldwide coronavirus cases global கரோனா வைரஸ், உலகளாவிய நிலவரம், உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு, கோவிட்-19 பாதிப்பு

உலக மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்துக்கு கரோனா வைரஸின் புதிய பரிமாணம் ஏற்படுத்திய நோயான கோவிட்-19 பெருந்தொற்று நோய் பெரும் அச்சுறுத்தல், பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் நோயிக்கு உலகில் 39 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் இழப்பு இரண்டு லட்சத்து 70 ஆயிரத்து 720 ஆக உள்ளது. வைரஸ் பிடியிலிருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 44 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக 94 ஆயிரத்து 581 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாயிரத்து 636 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளின் பட்டியல்

நாடுகள்பாதிப்புஇழப்பு
அமெரிக்கா12,92,62376,928
ஸ்பெயின்2,56,85526,070
இத்தாலி2,15,85829,958
பிரிட்டன்2,06,71530,615
ரஷ்யா1,77,1601,625
பிரான்ஸ்1,74,79125,987
ஜெர்மனி1,69,4307,392
பிரேசில்1,35,7219,190
துருக்கி1,33,7213,641
ஈரான்1,03,1356,486

சீனாவின் வூகான் பகுதியில் முதலில் அறியப்பட்ட இந்த வைரஸ் தாக்குதலுக்கு, குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தோர் எளிதில் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின்னர், உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்காவிட்டால் வைரஸ் வீரியமாகி உயிரைக் கொல்லும் நிலைக்கு வளர்ந்துவிடுகிறது.

இதற்கிடையில், கரோனா வைரஸின் தாக்கம் குறைந்துவிட்டது என்று அறியப்பட்ட நாடுகளான சீனா மற்றும் தென் கொரியாவிலும் இன்று (மே8) கரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் புதியதாக கண்டறியப்பட்டுள்ளனர். அந்த வகையில் சீனாவில் 16 பேரும், தென் கொரியாவில் 12 பேரும் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

சீனாவில் இதுவரை மொத்தம் 82 ஆயிரத்து 886 பாதிப்பாளர்களுடன் நான்காயிரத்து 633 கரோனா வைரஸ் உயிர் இழப்புகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: கரோனா: அதிக பாதிப்புக்குள்ளான முதல் ஐந்து மாநிலங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.