ETV Bharat / international

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு கோவிட் பாதிப்பு

author img

By

Published : Feb 1, 2022, 2:25 PM IST

கனடாவில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அந்நாட்டு பிரதமருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Canadian Prime Minister Justin Trudeau
Canadian Prime Minister Justin Trudeau

கனடாவில் கோவிட்-19 தொற்று பரவல் தீவிரமடைந்துவருகிறது. அங்கு நாள்தோறும் சுமார் 20,000 பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், நாட்டின் மொத்த கோவிட்-19 பாதிப்பு 30 லட்சத்து 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஒமைக்ரான் தொற்று காரணமாக கோவிட் பரவல் தீவிரமடைவதால், அதை கட்டுப்படுத்த அண்டை நாடுகளிலிருந்து வரும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என விதியை கனடா அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் கிளர்ந்தெழுந்து அந்நாட்டின் நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தி போராட்டம் நடத்திவருகிறது. இந்த போராட்டம் கனடாவையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலுக்கு இடையே, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "எனக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நான் நலனுடன் உள்ளது. பொது சுகாதார விதிகளைப் பின்பற்றி நான் வீட்டிலிருந்தே வேலை செய்யவுள்ளேன். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜனவரியில் ஜிஎஸ்டி உச்சம்; ரூ.1.40 லட்சம் கோடி வருவாய் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.