ETV Bharat / entertainment

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்

author img

By

Published : Jul 18, 2022, 3:56 PM IST

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரவுள்ள ‘கொலை’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் மோஷன் போஸ்டர் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்

சென்னை: Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K குமார் எழுதி இயக்கும் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கொலை’. இந்த சஸ்பென்ஸ் மர்ம திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களின் புதுமையான முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இந்தப் புதுமையான முயற்சி மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லீலா’ கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பான்-இந்திய பரபரப்பான நடிகர் முரளி சர்மா 'தி ஏஜென்ட் ஆதித்யா பாத்திரத்திலும், 'தி பாய்பிரண்ட் சதீஷ்’ பாத்திரத்தில் சித்தார்த்த ஷங்கர், 'தி பாஸ், ரேகா' பாத்திரத்தில் ராதிகா சரத்குமார், 'புகைப்படக்காரர் அர்ஜுன்' பாத்திரத்தில் அர்ஜுன் சிதம்பரம், 'மேனேஜர் பப்லு' பாத்திரத்தில் கிஷோர் குமார் , 'பக்கத்து வீட்டுக்காரர் வினோத் பாத்திரத்தில் சம்கித் போஹ்ரா, 'தி காப் - மன்சூர் அலி கான்' பாத்திரத்தில் ஜான் விஜய்,

அப்ரண்டிஸ் சந்தியா' பாத்திரத்தில் ரித்திகா சிங் ஆகியோருடன் 'துப்பறியும் விநாயக்' பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். கதாபாத்திரங்களைப் பற்றிய சரியான தெளிவை பார்வையாளர்களுக்கு அளிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் 'கொலை' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இது அதன் உயர்தர காட்சிகள், கதாபாத்திரங்களின் புதுமையான அறிமுகம், ஒரு அற்புதமான இசையில் பழைய எவர்க்ரீன் பாடலான . 'புதிய பறவை'யிலிருந்து 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடலோடு, நம்மை கட்டிப்போடும் அளவு ஆரவத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: 'தி லெஜண்ட்' படத்தின் 3ஆவது பாடல் நாளை வெளியாகிறது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.