ETV Bharat / entertainment

ஹாட்ஸ்டார் ஒடிடியில் நேரடியாக வெளியாகும் ‘வட்டம்’

author img

By

Published : Jul 19, 2022, 1:06 PM IST

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தை நேரடி திரைப்படமாக வெளியிடுகிறது.

ஹாட்ஸ்டார் ஒடிடியில் நேரடியாக வெளியாகும் ‘வட்டம்’
ஹாட்ஸ்டார் ஒடிடியில் நேரடியாக வெளியாகும் ‘வட்டம்’

சென்னை: கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்த தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்றுகிறது.

நடிகர் சிபிராஜ் கூறியதாவது, “வட்டம் எனது கேரியரில் மிக முக்கியமான படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இது எனது முதல் படம். வட்டம் படத்தை சூது கவ்வும் புகழ் ஸ்ரீனிவாஸ் கவிநயம் எழுதி, மதுபான கடை புகழ் திரு.கமலக்கண்ணன் இயக்கியிருப்பது, எனக்கு மிக மகிழ்ச்சியை தந்தது.

எளிய இளைஞனாக நடிப்பதில் இருந்து மாறி, சாதாரண மனிதனாக நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை வட்டம் பூர்த்தி செய்துள்ளது. பெரிய லட்சியங்கள் ஏதுமில்லாமல் வாழக்கையை அதன் போக்கில் அந்த தருணத்தை அனுபவித்து வாழும் மனிதனாக நடித்துள்ளேன்.

நான் இப்படத்தில் கதாநாயகன் என்றாலும், ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி நடித்த கதாபாத்திரங்களுக்கும் படத்தில் சம அளவில் முக்கியத்துவம் உள்ளது. இப்படம் உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் தரும்.

இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது, நம் வாழ்க்கைச்சக்கரத்தில் நம்பிக்கை ஒளி வந்து வந்து போகும். அதேபோல, நமது அன்றாட வாழ்க்கையும் அதே வழக்கமான முறையில்தான் இயங்குகிறது. இப்படி போய்கொண்டிருக்கும் வாழ்கையில் திடீரென ஏற்படும், ஒரு சிறிய மாற்றம் அந்த நாளை தலைகீழாக மாற்றிவிடும். நமது முழு பழக்கவழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும், மேலும் நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

நாம் மீண்டும் அந்த சக்கரத்தின் ஆரம்ப புள்ளியை அடையும்போது, நம் பழக்கவழக்கங்கள் உட்பட, ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து இருப்பதை நாம் காணலாம். ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 மணி நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் தான் திரைக்கதை.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனித்துவமான படங்கள், மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களை சீரான முறையில் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது.

இதையும் படிங்க: இரவின் நிழல் வியாபார நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் அல்ல - நடிகர் பார்த்திபன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.