ETV Bharat / entertainment

Thalapathy 66: ஜூன் 21 மாலை 6:01 முதல் ‘தளபதி 66’ ஃபர்ஸ்ட் லுக்..!

author img

By

Published : Jun 19, 2022, 7:04 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி வெளியாகும் நேரத்தை அப்படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Thalapathy 66: ஜூன் 21 மாலை 6:01 முதல் ‘தளபதி 66’ ஃபர்ஸ்ட் லுக்..!
Thalapathy 66: ஜூன் 21 மாலை 6:01 முதல் ‘தளபதி 66’ ஃபர்ஸ்ட் லுக்..!

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ‘தளபதி 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற ஜூன் 21 அன்று மாலை 6:01ற்கு வெளியாகுமென அப்படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, மற்றும் சரத்குமார், ஷியாம், சங்கீதா, யோகி பாபு, குஷ்பூ என ஓர் நட்சத்திரப் பட்டாளமே துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகிற ஜூன் 22, விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ’தளபதி 66’ குறித்த அப்டேட் வருமென எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அப்படக்குழுவினர் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளனர்.

ஜூன் 21 மாலை முதலே இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகிவிடும் என்ற செய்தியைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் இணையம் முழுவதும் இதை சேர் செய்து வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: முதலில் புதுப்பேட்டை - 2.., அதன் பின் ஆயிரத்தில் ஒருவன் - 2..! - செல்வராகவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.