ETV Bharat / entertainment

மஹத் நடிக்கும் ‘காதலே காதலே’ படம் பூஜையுடன் தொடங்கியது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 1:58 PM IST

kadhale kadhale : பிரேம்நாத் இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' திரைப்படத்தின் பூஜை இனிதே துவங்கியது.

kadhale kadhale
முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகும் "காதலே காதலே"

சென்னை: மஹத் ராகவேந்திரா மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தை ஆர். பிரேம்நாத் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.பிரேம்நாத் கூறுகையில், ​​"அனைவரின் வாழ்க்கையிலும் இளமை பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காதல் இருந்து வருகிறது. இருப்பினும், காதலில் விழுவதும், அந்தத் துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது. 'காதலே காதலே' தற்போதைய தலைமுறையின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்க இருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதல் கொண்டாட்டமாக இந்த படம் இருக்கும். மஹத் ராகவேந்திராவுக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையை டெவலப் செய்த பிறகு, இந்த கதாபாத்திரங்களுக்கு மஹத்தும் மீனாட்சியும் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று நான் உணர்ந்தேன்" என தெரிவித்தார்.

மேலும் இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், வி.டி.வி கணேஷ், ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். சுதர்சன் கோவிந்தராஜன் (ஒளிப்பதிவு), எம்.எஸ். சாகு (கலை), மற்றும் தியாகு (எடிட்டிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். இப்படத்தை ஸ்ரீவாரி பிலிம் தயாரித்துள்ளது.

இதையும் படிங்க: “கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது” - நடிகை ரேகா வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.