ETV Bharat / entertainment

ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ‘ஆண்டனி’ பட டீசர்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 3:57 PM IST

இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள ‘ஆண்டனி’ திரைப்படத்தின் டீசர் ‘லியோ’ திரைப்படம் வெளியாகவுள்ள அக்.19ஆம் தேதியன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மலையாள இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் திரைப்படம் 'ஆண்டனி'. இந்த படத்தை ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் ஐன்ஸ்டின் சாக் பால் தயாரித்துள்ளது. மேலும், சுஷில் குமார் அகர்வால், நிதின் குமார் மற்றும் ரஜத் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமாக படம் என கூறப்படுகிறது.

முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஆண்டனி’ படத்தின் டீசர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்துடன் சேர்ந்து ‘ஆண்டனி’ பட டீசல் வெளியாகவுள்ளது.

ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள 'ஆன்டனி' படம் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 23ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. சிறு கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆண்டனி எதிர்பாராத விதமாக கொலை ஒன்று செய்துவிடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை உணர்ச்சிகளுடம் கூறுவதே ‘ஆண்டனி’ படத்தின் கதை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டனி படம் குறித்து நடிகர் ஜோஜு ஜார்ஜ் கூறுகையில், "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் ஜோஷி உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் முந்தைய படமான 'பொரிஞ்சு மரியம் ஜோஸ்' எனக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், சினிமா வாழ்க்கையின் மைல்கல்லாகவும் அமைந்தது. அந்த வரிசையில் 'ஆண்டனி' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெரும், நிச்சயம் மக்களை ஏமாற்றாது” என்றார்.

தொடர்ந்து படத்தின் கதாநாயகி கூறுகையில், "படத்தின் கதைக்களம் தனித்துவமாக உள்ளது. அதே நேரத்தில் ரசிகர்களை இணைக்கக்கூடிய உணர்ச்சிகள் உள்ளது. இதுவரை என்னை ரசிகர்கள் எப்படி பார்த்தார்களோ அதற்கு நேர்மாறாக எனது கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளது. ஜோஷி சார் ஆண்டனி படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார், இதைவிட த்ரில்லான ப்ராஜெக்ட்டை நான் கேட்டிருக்க முடியாது. அப்படிப்பட்ட அனுபவமுள்ள இயக்குநருடன் வழக்கத்திற்கு மாறான படமொன்றில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது" என்று கூறினார்.

‘ஆண்டனி’ திரைப்படத்தின் ஒளிப்பதிவு ரெனதீவின் செய்ய, ஜேக்ஸ் பிஜோ இசையமைத்துள்ளார். ஷியாம் எடிட்டிங் மற்றும் ஜோஷியின் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆண்டனி படம் நிச்சயம் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் : Y - plus பாதுகாப்பு வழங்கி மகாராஷ்டிரா அரசு உத்தரவு!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.