ETV Bharat / entertainment

மும்பையில் நடைபெற்ற "80'ஸ் ரீயூனியன்"

author img

By

Published : Nov 13, 2022, 5:28 PM IST

Updated : Nov 13, 2022, 7:15 PM IST

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக 80’ஸ் ரீயூனியன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் இதில் கலந்து கொண்டனர்.

சித்திரம்
சித்திரம்

மும்பை: 1980களில் திரை வானில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பைக் கொண்டாடி வந்தனர்.

'80’ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிழ்ச்சியின் 10ஆவது ஆண்டு கொண்டாட்டத்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு, நடிகர் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அது அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக இடம்பெற்றது. அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் '80’ஸ் ரீயூனியன்' நடைபெறவில்லை.

இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் '80’ஸ் ரீயூனியன்' நடந்தது. ராஜ் குமார், சரத் குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா, ராதா, அம்பிகா, ரேவதி, பூனம் தில்லான், நதியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட வண்ணங்களை தீமாக வைத்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும், ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கை தயார் செய்து விருந்தினர்களை வரவேற்றனர்.

80ஸ் ரீயூனியன்
மும்பையில் நடைபெற்ற "80'ஸ் ரீயூனியன்"

விடியற்காலை வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னிந்திய நடிகர்கள் இணைந்து கலைநிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். விளையாட்டு, விநாடி வினா, நட்பு, வேடிக்கை என அனைத்தும் நிறைந்த மாலைப் பொழுதாக ரீயூனியன் அமைந்திருந்தது.

இதையும் படிங்க: 'லவ் டுடே' பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி!

Last Updated : Nov 13, 2022, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.