ETV Bharat / entertainment

நெட்டிசன்களின் அலப்பறையால் மாமன்னன் படத்தின் ஹீரோவான ஃபகத் ஃபாசில்!!

author img

By

Published : Jul 31, 2023, 3:28 PM IST

மாமன்னன் படத்தில் ஃபகத் ஃபாசில் கதாபத்திரத்தை நல்லவர் போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் எடிட் வீடியோக்கள் பேசு பொருளாகியுள்ளது

Etv Bharat
Etv Bharat

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மாமன்னன். இந்தப் படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்களின் பிரதிநிதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை, அதே கட்சியில் மாவட்டச் செயலாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஃபகத் ஃபாசில் சமூக ரீதியாக ஒடுக்குதும், மரியாதை குறைவாக நடத்துவதும் போன்ற கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல்வேறு சர்ச்சைகளில் அடிபட்டது. அதில் மாமன்னன் ஆடியோ வெளியிட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் ”தேவர் மகன் திரைப்படத்தில் இடம்பெற்ற இசக்கி கதாபாத்திரம் தான் இந்த படத்தில் மாமன்னன்” எனக் கூறியது சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. இந்த சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்தது என்று பார்த்தால் படம் வெளியான பின்னர் இந்தப் படம் முன்னாள் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை என மற்றொரு டாக் ஓடியது.

ஆனால், இயக்குநர் மாரி செல்வராஜ் படம் வெளியாவதற்கு முன்னர் பல பேட்டிகளில் இந்தப் படத்தில் நடைபெறும் சில சம்பவங்கள் எனது தந்தையின் வாழ்வில் நடந்துள்ளது எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாமன்னன் திரைப்படம் சர்ச்சைகளுடனே பயணித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. எப்போதும் காமெடி கதாபாத்திரத்தில் மக்களைச் சிரிக்க வைத்த நடிகர் வடிவேலு, இந்தப் படத்தில் சீரியஸான மாமன்னன் கதாபாத்திரத்தில் கலங்க வைத்துவிட்டார் என ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.

மேலும் சாதிப் பாகுபாட்டினால் மிருகங்களை கொல்லக் கூடிய அளவிற்கு ஆக்ரோஷமான வில்லனாக மாமன்னன் படத்தில் ஃபகத் ஃபாசில் இடம் பெற்றிருப்பார். அவரும் வடிவேலுவிற்கு இணையாக போட்டி போட்டு நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி இணையதளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

ஓடிடியில் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் மாமன்னன் படத்தில் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரமான ரத்னவேலுவை நல்லவர் போல் சித்தரித்து பல வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது. தாமிரபரணி படத்தின் கட்டபொம்மன் ஊரெனக்கு, பத்து தல படத்தின் ‘நீ சிங்கம் தான்’, தாஜ்மஹால் படத்தின் ‘திருப்பாச்சி அருவாள’ என பல்வேறு பாடல்கள் மேஷப் எடிட் செய்யப்பட்டு நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது. நேற்று முதல் ட்விட்டர், ஃபேஸ்புக் என எங்கு பார்த்தாலும் ரத்னவேலு வீடியோக்கள் ட்ரெண்டாகின. முன்னதாக இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் பேசிய ‘என்ன பழக்கம் நா இது’ என்ற வசனமும் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன்களின் அலப்பறையால் மாமன்னன் படத்தின் ஹீரோவான ஃபகத் ஃபாசில்
நெட்டிசன்களின் அலப்பறையால் மாமன்னன் படத்தின் ஹீரோவான ஃபகத் ஃபாசில்

ஒரு சில நபர்கள் படத்தில் இதை கதாபாத்திரமாக பார்க்க வேண்டும் எனக் கூறினாலும், வீடியோ விவகாரம் சமூக வலைதளங்களில் இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாக கூறுகின்றனர். பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா படம் வெளியான சில நாட்களில் இளைஞர்கள் இந்த கதாபாத்திரத்தால் தவறாக வழிநடத்தப்பட வாய்ய்புள்ளதாக கூறியிருந்தார். மேலும் ஒரு சில நெட்டிசன்கள் ‘உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா.... வில்லன் கேரக்டர இப்படி வீடியோலாம் பண்ணி நல்லவனா ஆக்கிட்டீங்க. மாரி செல்வராஜ் பாத்தா என்ன நினைப்பாரு’ என மீம்ஸ் பதிவிட்டும் வருகின்றனர்.

இதையும் படிங்க: HBD Kiara Advani: நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.