ஆண் நண்பருடன் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம்! வீடியோ வைரல்!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Dec 4, 2023, 3:51 PM IST

janhvi kapoor and her rumoured boyfriend shikhar pahariya offer prayers at mahakaleshwar temple

Janhvi Kapoor boyfriend: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் தனது ஆண் நண்பரான ஷிகர் பஹாரியாவுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

நடிகை ஜான்வி கபூர் நண்பரான ஷிகர் பஹாரியாவுடன் கோயிலில் தரிசனம்

மத்திய பிரதேசம்: மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் 'துணிவு' பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். தடக் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ஜான்வி, சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தற்போது இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

கோஸ்ட் ஸ்டோரீஸ், குன்ஜன் சக்சேனா, ரூஹி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். ஜான்வி கபூர் அவ்வபோது கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். இவர் கோயிலுக்கு செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கம்.

வருடத்தில் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வேன் என ஒரு நேர்காணலில் ஜான்வி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று (டிச. 4) ஜான்வி கபூர் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.

முதன் முறையாக ஜான்வி தனது ஆண் நண்பரான ஷிகர் பஹாரியாவுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். இருவரும் பஸ்ம ஆரத்தியில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை வழிபாடுகளை நடத்தினர். இவர்களுடன் இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர். தற்போது இவர்கள் சாமி தரிசனம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிகர் பஹாரியா மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்வி தற்போது நடிகர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலி கான் நடித்துள்ள பான்-இந்திய திரைப்படமான தேவராவிலும் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதன் மூலம் அவர் இந்தி சினிமாவை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடதக்கது. தமிழில் விரைவில் அறிமுகம் ஆக இருப்பதாக தகவல் வெளிவந்தாலும் அது உண்மையல்ல என ஜான்வி தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: "அண்ணன் விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்" - நடிகர் சூர்யா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.