அயலான் படத்தின் CG காட்சிகளை பாராட்டிய நடிகர் சூர்யா!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 19, 2024, 12:22 PM IST

Updated : Jan 19, 2024, 12:46 PM IST

Actor Suriya praised Ayalaans CG visuals

Ayalaan : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படத்தின் CG காட்சிகளை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ஆம் தேதி ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியானது. ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் பானுப்பிரியா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போலவே, இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடடும் படமாகவும், குழந்தைகளைக் கவரும் படமாகவும் அமைந்துள்ளது. அதனால், இந்த பொங்கல் விடுமுறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படம் பார்க்கச் சென்றனர். தற்போது 7 நாட்கள் முடிவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் ரூ.63 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக வெளியாகமல் கிடப்பில் போடப்பட்டு தற்போது கடந்த 12ஆம் தேதி வெளியாக இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படம் கவர்ந்துள்ளது எனலாம். மேலும், இப்படத்தில் இடம் பெற்றுள்ள CG மற்றும் VFX காட்சிகள் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த படத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட CG காட்சிகள் உருவாக்கி இந்திய அளவில் ஒரு படத்தில் அதிக CG காட்சிகள் இடம்பெற்ற திரைப்படமாகவும் அயலான் திகழ்கிறது. இந்த நிலையில் அயலான் திரைப்படத்தில் அற்புதமான CG காட்சிகளை வடிவமைத்த பாந்தோம் நிறுவனத்திற்கு நடிகர் சூர்யா மலர் கொத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் எப்போது வெளியாகும்? நீதிமன்றத்தின் தீர்ப்பால் முடிவு கிடைத்ததா?

Last Updated :Jan 19, 2024, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.