ETV Bharat / entertainment

நடிகர் சத்தியராஜின் Weapon படம் முதல் யோகி பாபுவின் Lucky Man ட்ரைலர் வரையிலான சினிமா சிதறல்கள்!

author img

By

Published : Aug 20, 2023, 8:23 AM IST

Latest cinema news : சத்யராஜின் வெப்பன் முதல் யோகிபாபுவின் லக்கி மேன் வரை கோலிவுட், டோலிவுட்டின் இந்த வார சினிமா அப்டேட்ஸ்களை காணலாம். சினிமா சிதறல்கள்: சத்யராஜை பாராட்டிய வடிவேலு..

Etv Bharat
Etv Bharat

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 19) ஸ்ரீ காளஹஸ்திரி கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘மஹாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் சிங் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம் மற்றும் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில் நடிகர் விஷ்ணு மஞ்சு ஈடுபட்டார். 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர். மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் பிரமாண்டமான காவியமாக உருவாக இருக்கும் இப்படத்தில், கண்ணப்பா வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார்.

கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரபல எழுத்தாளர்கள் பருச்சுரிகோபாலகிருஷ்ணா, தோட்டா பிரசாத், தோட்டப்பள்ளி சாய்நாத், புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸே படத்திற்கான இசையமைக்கின்றனர். ஷெல்டன் ஷா ஒளிப்பதிவு செய்ய, சின்னா கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

உண்மையும், மர்மமும் கலந்த ஹாரர் படம் 'டீமன்'(Demon): உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஹாரர் படம் 'டீமன்'. அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின், அபர்ணதி, 'கும்கி' அஸ்வின், உள்ளிட்ட பலர் நடிப்பில் அடுத்த மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை ஆர். சோமசுந்தரம் தயாரிக்க, பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் B. யுவராஜ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் வெளியிடுகிறார். மேலும் படத்தை, இயக்குநர் வசந்தபாலன் உடன் இணைந்து வழங்குகிறார்.

டீமன்
டீமன்

படம் குறித்து இயக்குநர் ரமேஷ் பழனிவேல் கூறுகையில், “இயக்குநர் வசந்தபாலனிடம் 'அங்காடித்தெரு' படம் துவங்கி இப்போது வரையிலும் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன்.' டீமன்' என்னுடைய முதல் திரைப்படம். டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 நபர்கள் ஒன்றாக இணைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஹாரர் படம் தான் இந்த 'டீமன்'.

மேலும் பல்வேறுபட்ட மர்ம நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆர்.எஸ்.அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரவிக்குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற 'அஸ்வின்ஸ்' திரைப்படத்தில் இசைக் கலவை செய்த ரோனி ரபேல், இந்தப் படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். நிச்சயம் இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிக்கலவை காரணமாகவே சிறந்தத் திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

சத்யராஜின் வெப்பன் படத்தை பாராட்டிய வடிவேலு: மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள படம் ‘வெப்பன்’ (Weapon). நடிகர் சத்யராஜின் அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளைத் தூண்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் அவருடைய ‘வெப்பன்’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

படத்தில் மற்றொரு கதாநாயகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். சஸ்பென்ஸ் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் மலைப் பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெற்றது. புதிய டெக்னாலஜியில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சத்யராஜின் வெப்பன் படத்தை பாராட்டிய வடிவேலு
சத்யராஜின் வெப்பன் படத்தை பாராட்டிய வடிவேலு

இந்த படத்தை வாழ்த்தி நடிகர் வடிவேலு பேசியதாவது, "என் அன்பு அண்ணன் சத்யராஜ் 'வெப்பன்' படத்தில் நடித்திருக்கிறார். உலக அளவில் செல்ல வேண்டும் என்பதற்காக பான் இந்திய அளவில் படத்தைத் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் எடுத்திருக்கிறார். முதன் முதலாக ஏஐ டெக்னாலஜியை உபயோகப்படுத்தி இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. 'வெப்பன்' படத்தினை எல்லோரும் தியேட்டரில் பார்த்து மகிழுங்கள். இப்போது டீசரை பார்த்துக் கொண்டாடுங்கள்" என்றார்.

சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) மியூசிக் வீடியோவை ராம் சரண் வெளியிட்டார்: நடிகர் சாய் தரம் தேஜ் மற்றும் நடிகை ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) மியூசிக் வீடியோவை, நவின் விஜய கிருஷ்ணா இயக்கியுள்ளார். மியூசிக் வீடியோவை முன்னணி நட்சத்திர நடிகர் ராம்சரண் வெளியிட்டார். ப்ரோ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சாய் தரம் தேஜ் இந்த முறை ஒரு அழகான மியூசிக் வீடியோவில் அசத்தியிருக்கிறார்.

சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவில் நடிகை சுவாதி ரெட்டி இணைந்து நடித்துள்ளார். இந்த மியூசிக் வீடியோவை சாய் தரம் தேஜின் உறவினரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்பட நட்சத்திர நடிகருமான ராம் சரண் சமூக வலைதளங்களில் வழியே வெளியிட்டார். நாட்டின் மீது கொண்ட அன்பிற்காக நாட்டை காக்க, தேசத்தின் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் தடைகளை சித்தரிப்பதாக இந்த மியூசிக் வீடியோ அமைந்துள்ளது.

மியூசிக் வீடியோ வெளியீட்டை அறிவித்த சாய் தரம் தேஜ் தனது ட்வீட்-ல், "விதி அதன் மேஜிக்கை மீண்டும் நிரூபித்துவிட்டது!!! எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திய நாயகன் மற்றும் எங்கள் நட்பின் அடையாளமாக இருப்பவர், இப்போது நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய #TheSoulOfSatya உடைய பாடலை வெளியிடுகிறார்.

சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya )
சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya )

இந்த அற்புதமான மனிதரை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் மற்றும் எங்கள் மியூசிக் வீடியோவை வெளியிட்டதற்கும் சரண் @AlwaysRamCharan நன்றி. @NawinVK நவீன் மற்றும் சத்யாவின் ஆத்மா படைப்பின் மொத்த குழுவிற்கும் இது மிகப்பெரும் பெருமை". இந்த மியூசிக் வீடியோவை நவீன் விஜய் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில், அதில் ஸ்ருதி ரஞ்சனி பாடி இசையமைத்துள்ளார்.

பாடலாசிரியர் விவேக் ரவி இப்பாடலை தமிழில் எழுதியுள்ளார். தில் ராஜு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ‘பாலகம்’ என்ற வெற்றிப் படத்தை தயாரித்த ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஹன்சிதா ரெட்டி இந்த படைப்பைத் தயாரித்துள்ளனர்.

யோகி பாபுவின் லக்கி மேன் (Lucky Man) ட்ரைலர் வெளியீடு: இந்த ஆண்டு அடுத்தடுத்து நடித்த படங்களில் காமெடியில் கலக்கி வரும் யோகி பாபு நாயகனாகவும் சிறப்பாக நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் ‘லக்கி மேன்’. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேகா, ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியது. அதனைத் தொடர்ந்து, ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: “முதலில் பிடிக்கவில்லை, இப்போது பழக்கப்படுத்தி கொள்கிறேன்” என தமன்னாவின் காதலர் விஜய் வர்மா கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.