ETV Bharat / crime

அளவுக்கு அதிகமாக அலர்ஜி மாத்திரைகள் உட்கொண்ட பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 10, 2021, 12:48 PM IST

அளவுக்கு அதிகமாக அலர்ஜி மாத்திரைகளை எடுத்து கொண்ட திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நேற்று (ஜூலை .10) பரிதாபமாக உயிரிழந்தார்.

young women death
பெண் உயிரிழப்பு

கோயம்புத்தூர்: நீலிக்கோணாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரது மகள் லாவண்யா (28). இவர் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். லாவன்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நேற்று (ஜூலை.10) அவருக்கு கைகளில் அலர்ஜி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்காக அவர் ஐந்து அலர்ஜி மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் மயக்க நிலைக்குச் சென்ற அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அலர்ஜி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டதால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பரப்பன அக்ரஹாரா சிறையில் ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.