ETV Bharat / crime

திமிங்கல உமிழ்நீர் கட்டிகளைக் கடத்தியவர்கள் கைது - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

author img

By

Published : Jan 6, 2022, 9:15 PM IST

அம்பர்கிரிஸ் (Ambergris) எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளைக் கடத்திவந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் (Ambergris)
திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்தியவர்கள்

தென்காசி: பழைய பேருந்து நிலையம் அருகில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பகராஜா உள்பட காவலர்கள் இன்று (ஜனவரி 6) வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து வாகனத்தைச் சோதனை செய்ததில், சென்னையிலிருந்து மூன்று கோடியே ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட அம்பர்கிரிஸ் (Ambergris) எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரான 21 கிலோ எடை கொண்ட இரண்டு கட்டிகளைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்தியவர்கள்
திமிங்கல உமிழ்நீர் கட்டிகளைக் கடத்தியவர்கள்

இக்கடத்தலில் ஈடுபட்ட, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல் ரோஸ், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த மோகன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் கடத்தல்

பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவர் உள்பட கைப்பற்றப்பட்ட பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியோரை கடையநல்லூர் வனச்சரக அலுவலர் வசம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். மேலும் இந்தக் கடத்தலில் தப்பியோடிய வேலூரைச் சேர்ந்த கமல் பாபு, கம்பனேரியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய இருவரை வனத் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: Valimai Flim postponed: வலிமை திரைப்படம் தள்ளிவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.