ETV Bharat / crime

பள்ளி மாணவன் மீது மோதிய இருசக்கர வாகனம்; தப்பி ஓடியவருக்கு போலீஸ் வலைவீச்சு..

author img

By

Published : Nov 8, 2022, 9:35 AM IST

ஓமலூர் அருகே ஒன்றாம் வகுப்பு மாணவன் மீது இருசக்கர வாகனம் மோதிய நிலையில், தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவன் மீது இருசக்கரவாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடியவரை போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர்
பள்ளி மாணவன் மீது இருசக்கரவாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடியவரை போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர்

சேலம்: ஓமலூர் அருகே திண்டமங்கலம் ஊராட்சி, பனங்காட்டூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமச்சந்திரன் மகன் கவினேஷ். இவர் பனங்காட்டூரில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 4ந் தேதி பள்ளியில் இருந்து சாலையின் மறுபக்கம் உள்ள கழிவறைக்கு சென்று தார்சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது தொளசம்பட்டி செல்லும் வழியில் பள்ளி வளாகம் என்று தெரிந்தும் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் சலையைக் கடந்த மாணவன் மீது மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்ட மாணவன் கால்முறிவு ஏற்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மாணவன் மீது இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவன் மீது மோதிய இருசக்கர வாகனம்

அந்த வீடியோவில் விபத்து நடந்த உடன் அருகில் உள்ளவர்கள் சிறுவனை தூக்கி சென்ற பின், இளைஞர் தனது வாகனத்தில் அதிவேகத்தில் தப்பித்து செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து தொளசம்பட்டி போலீசார் தப்பி ஓடிய இளைஞரை தேடி வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் இரண்டு வேகத்தடை உள்ள நிலையிலும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது போல் அதிகமாக வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: முன்னாள் மனைவியின் 2வது கணவரை அடித்து கொன்ற முதல் கணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.