ETV Bharat / crime

கள்ளத்தனமாக மது விற்ற பெண் கைது - 406 மது பாட்டில்கள் பறிமுதல்

author img

By

Published : Mar 13, 2021, 7:07 AM IST

தர்மபுரி: பென்னாகரம் அடுத்த குள்ளாத்திரம்பட்டியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

illegal liquor sale
கள்ளத்தனமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையடுத்து கள்ளத்தனமாக மதுபாட்டில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பல புகார்கள் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதைத்தொடர்ந்து பென்னாகரம் அடுத்த குள்ளாத்திரம்பட்டியில் மகேஸ்வரி என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலையடுத்து, நேற்று முன் தினம் (மார்ச்11) இரவு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் அங்கு சோதனையிட்டனர்.

அப்போது, 87 பீர் பாட்டில், 319 குவாட்டர் பாட்டில் என மொத்தம் 406 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.55 ஆயிரம் எனத் தெரியவந்துள்ளது. மது பாட்டில்களை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்ற மகேஸ்வரியை மதுவிலக்கு அமல் பிரிவினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ரூ. 93 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.