ETV Bharat / crime

தலை சுற்றும் கேட்டால்... பங்குகளாக சொத்துகள் குவித்த முன்னாள் அமைச்சர்

author img

By

Published : Jan 20, 2022, 7:19 PM IST

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்குகளாக சொத்துகளை குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Former Minister KP Anbalagan
முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய விசாரணையில், கே.பி அன்பழகன் பல கோடி ரூபாய், பங்குகளாக வாங்கி குவித்ததாக தெரியவந்துள்ளது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், “முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பெயரில் பாக்கியலட்சுமி தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் 50 விழுக்காடு பங்குகளும், எஸ்.எம் ப்ளூ மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தில் 50 விழுக்காடு பங்குகளும் உள்ளன.

இவரது மகன் சசிமோகன் பெயரில், ஏஎம்பிஎஸ்(AMPS) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்னொரு மகன் சந்திரமோகன் பெயரில், அன்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. பாக்கியலட்சுமி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனின் மனைவி மல்லிகா பெயரில் செயல்பட்டு வருகிறது.

மேலும், சரஸ்வதி பழனியப்பன் கல்வி அறக்கட்டளை ஒன்றையும் கேபி அன்பழகன், அவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இவர் தனது மருமகன் ரவிசங்கர் பெயரில், தர்மபுரி காரிமங்கலம் பகுதியில் கல்பனஹல்லி கிராமத்தில் கல்குவாரி வைத்துள்ளார். அதே பகுதியில் மற்றொரு உறவினரான சரவண குமார் என்பவர் பெயரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. மேலும் செந்தில்குமார் பெயரில் கல் உடைக்கும் நிறுவனம் மற்றும் எம்சாண்ட் யூனிட் நடத்தப்பட்டு வருவகிறது.

கே.பி அன்பழகன் அவரது நெருங்கிய தொழில் நண்பரான அணுக்ராஜ் என்பவருடன் எஸ்.எம் ப்ளு மெட்டல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னை கோபாலபுரத்தில் தனது சகோதரி மகள் தீபா அவரது கணவர் சிவக்குமார் மூலம் கணேஷ் கிரானைட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதேபோன்று தெலுங்கானாவில் உள்ள வைஷ்ணவி கிரானைட் தொழிற்சாலை நிறுவனத்தில் 80 விழுக்காடு பங்குகளை அவரது சகோதரியின் மருமகன் சிவகுமார் வைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; மதபோதகர் மீது போக்சோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.