ETV Bharat / crime

சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக அவதூறு - உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Feb 3, 2022, 3:27 PM IST

இந்து அறநிலையத்துறை ஆலோசனை குழு அலுவல்சாரா உறுப்பினர் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindu Religious and Charitable Endowments Department Advisory Committee
சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக அவதூறு

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில், இந்து அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அலுவல்சாரா உறுப்பினராக திருப்பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை விமர்சிக்கும் வகையில், ஃபேஸ்புக்கில் ராஜநாக முனிவர் என்ற பெயரில் தரக்குறைவான வார்த்தைகளுடன் சில கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, சண்டிகேசுவர நாயனார் நற்பணி மன்றத்தின் தலைவரான டி.சுரேஷ்பாபு, கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர், சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் ஆகியோரிடம் ஜனவரி 18ஆம் தேதி புகாரளித்துள்ளார்.

இந்த புகார்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை சுரேஷ்பாபு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, “ சுரேஷ்பாபு அளித்த புகார் மனுவை நான்கு வாரங்களில் கோயம்புத்தூர் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் விசாரித்து, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 3 நாள்களுக்கு தமிழ்நாட்டின் வானிலை இப்படித்தான் இருக்குமாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.