ETV Bharat / crime

Pocso Arrest:13 வயது மகளுக்கு பாலியல் சீண்டல்.. 3 கி.மீ பைக்கில் விடாமல் துரத்திய துணிவுமிக்க தந்தை!

author img

By

Published : Feb 5, 2023, 8:47 PM IST

Pocso Arrest: முகவரியை கேட்பதுபோல் நடித்து, 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை இருசக்கர வாகனத்தில் துரத்திப் பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்நபர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

Pocso Arrest:13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. பைக்கில் துரத்திய பரபரப்பு வீடியோ

Pocso Arrest: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நண்பனின் வீட்டிற்கு முகவரி கேட்பதுபோல நடித்து, சைக்கிளில் சென்ற 13 வயது சிறுமியிடம் ஒரு நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவரை சிறுமியின் தந்தை விடாமல் துரத்தினார். இதனைத்தொடர்ந்து, அந்நபரை கைது செய்த ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றும் மணிகண்டன்(29) என்ற இளைஞர், இன்று (பிப்.5) தனது நண்பனின் வீட்டுக்கு செல்ல வழி கேட்பதுபோல, கிராமத்தில் சாலையில் சென்ற 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், சிறுமி கூச்சலிட்டதால் இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றபோது அந்த வாகனத்தில் பதிவு எண்ணை சிறுமி குறித்து வைத்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பெற்றோர், இளைஞர் மீது புகார் கொடுக்க வந்தபோது சாலையில் அதே வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டி செல்வதைக் கண்டு நிறுத்தும் படி கூறியுள்ளார். இதைக் கேட்டதும், அந்நபர் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார்.

அவரை சிறுமியின் தந்தை 3 கி.மீ. வரை விடாமல் துரத்திய நிலையில் அந்நபர் தப்பித்துச் சென்றார். அப்போது அவரை துரத்தியபோது எடுத்த வீடியோவின் படி அதிலுள்ள வண்டியின் பதிவு எண்ணைக் கொண்டு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்ற இளைஞர் மீது பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இவற்றின் அடிப்படையில் தப்பிச் சென்ற மணிகண்டனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.