ETV Bharat / city

கிணற்றில் தவறி விழுந்த மான் பலி!

author img

By

Published : Aug 28, 2019, 7:45 PM IST

வேலூர்: தண்ணீர் தேடி ஊருக்குள் சென்ற மான் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

vellore forest deer dead

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் பகுதியில் நெக்னாமலையின் அடிவார பகுதிகளில் அதிகளவு மான்கள் வாழ்ந்துவருகின்றன.

இந்நிலையில், தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று அப்பகுதியில் உள்ள வெங்கட் என்பவருக்கு சொந்தமான 100 அடி விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மான் உயிரிழப்பு.  deer dead  vellore
கிணற்றில் விழுந்து பலியான மான்

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மானின் உடலை மேலே கொண்டுவந்தனர்.

பின்னர் அந்த மானை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும் வனப்பகுதியிலிருந்து அதிகளவு மான்கள் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் ஊருக்குள் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மானை கட்டி இழுக்கும் வனத்துறையினர்
Intro:

ஆம்பூர் அருகே ஒரு வயதுள்ள மான் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.


Body: வேலூர் மாவட்டம்

ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் நெக்னாமலையின் அடிவாரம் பகுதிகளில் அதிக அளவு மான்கள் வாழ்கின்றனர்.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள வெங்கட் என்பவருக்கு சொந்தமான 100 அடி விவசாய கிணற்றில் ஒரு வயது மதிக்கதக்க மான் உயிரிழந்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கிய வனத்துறையினர் மிகுந்த சிரமப்பட்டு இறந்த மானின் உடலை கயிறு கட்டி வெகு நேரத்திற்கு பிறகு மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் அம்மானை உடல்கூறு ஆய்விற்காக ஆம்பூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.



Conclusion: பின்னர் அப்பகுதிகளில் அதிக அளவு மான் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் இரவு நேரங்களில் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.