ETV Bharat / city

காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ. 5 கோடி மோசடி - அதிமுக ஊராட்சி மன்றத்தலைவருக்கு வலைவீச்சு!

author img

By

Published : Nov 5, 2021, 7:45 PM IST

காவல் துறையில் பல்வேறு பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த சுமார் 100 பேரிடம் ரூபாய் 5 கோடி மோசடி செய்த இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் முக்கியக் குற்றவாளியான அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அதிமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வலைவீச்சு
அதிமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வலைவீச்சு

ராணிப்பேட்டை மாவட்டம், பெரியவள்ளம் பகுதியைச்சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்றத்தலைவர் குமரேசன், வேலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை பிகிலர் தங்கராஜ்(70), ராணிப்பேட்டை மாவட்டம் தட்டச்சபாறையைச் சேர்ந்த சதீஷ்(31) ஆகியோர் காவல் துறையில் பல்வேறு பணிகளுக்கு,

வேலை வாங்கித் தருவதாகக்கூறி, சுமார் 100 பேரிடம் தலா ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை என மொத்தம் சுமார் ரூ.5 கோடி வரை பணம் வாங்கி, போலி பணி நியமான ஆணைகளை வழங்கி உள்ளனர்.

மிரட்டல் தொனியில் பேச்சு

இந்நிலையில், பணி நியமன ஆணைக்கான தேதி முடிந்தும் பணி வழங்கப்படாததால் சந்தேகமடைத்த ஏமாற்றப்பட்டவர்கள் பணத்தைத் திருப்பிக்கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பணத்தை தராததாலும்,

மிரட்டல் தொனியில் பேசியதாலும் மூவர் மீதும் தங்கள் பணத்தை மோசடி செய்ததாக வேலூர் விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த யுவநாதன்(25) மற்றும் அவருடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட 25 பேர் கடந்த வாரம் வேலூர் குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த காவல் துறையினர் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட தங்கராஜ் (70), சதீஷ் (31) ஆகியோரை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ஊராட்சி மன்றத் தலைவர் குமரேசன்(35) தலைமறைவாகிய நிலையில் அவரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 33 பேர் மரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.