ETV Bharat / city

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு 12 ஆண்டுகள் சிறை!

author img

By

Published : Sep 19, 2019, 11:53 PM IST

திருச்சிராப்பள்ளி: பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு 12 ஆண்டு சிறை

திருச்சி திருவானைக்காவலைச் சேர்ந்தவர் நடராஜன் (37). உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மகளுடன் அருகிலுள்ள ஒரு தோழியும் அதே பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடராஜன் மகளின் தோழியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்திருக்கிறார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடராஜனைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து மகிளா நீதிமன்ற நீதிபதி வனிதா தீர்ப்பளித்தார். சிறுமியைக் கர்ப்பமாக்கிய நடராஜனுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் பணமும் அபராதமாக விதித்துத் தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நடராஜன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Intro:பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை தண்டனை விதித்து
திருச்சி மகிளா நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.Body:

திருச்சி:
பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை தண்டனை விதித்து
திருச்சி மகிளா நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி திருவானைக்காவலை சேர்ந்தவர் நடராஜன் (37).
புரோட்டா மாஸ்டர்.
இவருடைய மகள் மற்றும் அவரது தோழியும் அருகில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடராஜன் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு ம விசாரணை முடிந்ததை தொடர்ந்து
மகிளா கோர்ட் நீதிபதி வனிதா தீர்ப்பளித்தார். சிறுமியை கர்ப்பமாக்கிய நடராஜனுக்கு 12 ஆண்டு கடுங்காவல் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நடராஜன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.