ETV Bharat / city

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவருக்கு ஆயுள்..!

author img

By

Published : Jul 20, 2019, 8:15 AM IST

திருப்பூர்: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

girl suicide judgement life sentence for advocate

திருப்பூர் மாவட்டம், நத்தக்கடையூர் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா தேவி. இவருக்கும் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவண ராஜ்குமார் என்பவருக்கும், கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 75 பவுன் தங்க நகையும், சொகுசு வாகனமும் பெண் வீட்டார் தரப்பில் கொடுக்கப்பட்டது.

திருமணத்திற்கு பிறகும் கூடுதல் பணம், நகை வாங்கி வருமாறு யமுனா தேவியை, சரவண ராஜ்குமார் துன்புறுத்தியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, யமுனா தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலில் சந்தேக மரணம் என்ற அடிப்படையிலேயே, காங்கேயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற கோட்டாட்சியர் விசாரணையில் யமுனா தேவி வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நிறைவுபெற்ற நிலையில் நீதிபதி ஜெயந்தி அளித்த தீர்ப்பில், சரவண ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட மற்ற மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Intro:வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு

Body:திருப்பூர் மாவட்டம் நத்தக்கடையூர் பகுதியை சேர்ந்தவர் யமுனா தேவி . இவருக்கும் கோவை செல்வபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரவண ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கார் பெண் வீட்டார் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.திருமணத்திற்கு பிறகும் சரவண ராஜ்குமார் யமுனா தேவியை அவரது பெற்றோரிடம் கூடுதல் பணம், நகை வாங்கி வருமாறு கேட்டு வற்புறுத்தியுள்ளார்.. மேலும் இதற்காக அவரை துன்புறுத்தியுள்ளார். 2013 ஆண்டு ஜூன் 19-ம் தேதி யமுனா தேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் புகாரின் பேரில் முதலில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காங்கேயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற கோட்டாட்சியர் விசாரணையில் யமுனா தேவி வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரனை நிறைவுபெற்ற நிலையில் . நீதிபதி ஜெயந்தி தனது தீர்ப்பில் சரவண ராஜ்மாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.