ETV Bharat / city

தனியார் அனல் மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து: 3 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைப்பட்டது

author img

By

Published : Jan 2, 2021, 10:13 PM IST

தூத்துக்குடி அருகேயுள்ள இந்த் பாரத் தனியார் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீயை, 3 மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

3 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீ அணைப்பட்டது
3 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீ அணைப்பட்டது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வேலாயுதபுரத்தில் உள்ள இந்த் பாரத் அனல் மின் நிலையத்தில், இன்று (ஜன.02) மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலை நிர்வாகத்தினர், சிப்காட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து பகுதிக்கு விரைந்து சென்ற சிப்காட் தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள், காட்டுக்கடங்காத தீ ஆலையின் இயந்திரங்கள் உள்ள அறை பரவி பற்றி எரிய ஆரம்பித்து. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. அதேபோல், ஆலையைச் சுற்றியுள்ள கீழவேலாயுதபுரம், மேல வேலாயுதபுரம், புதூர்பாண்டியாபுரம் ஆகிய பகுதிகளும் புகை மூட்டமாக காணப்பட்டது.

3 மணிநேர போராட்டம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர, தூத்துக்குடி தீயணைப்பு அலுவலகத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் தீ கட்டுக்குள் வராததால், அருகே உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்தும், கோஸ்டல் எனர்ஜியான், வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

சுமார், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராட்டிய தீயணைப்பு வீரர்கள், மாலை 6.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.

மின் கசிவால் தீ விபத்து

இது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "இன்று பிற்பகல் 12 மணி அளவில் தனியார் அனல் மின் உற்பத்தி நிலையத்தில், மின் கசிவு காரணமாக, மின்சாரம் கொண்டு செல்லும் வயர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் கேபிள்கள் மற்றும் மின்சார போர்டுகள் எரிந்து, அதன் வழியே மின் உற்பத்தி நடைபெறும் பாய்லருக்கு தீ பரவ தொடங்கியது. அந்த சமயத்தில் சரியான நேரத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் வந்ததால், கேபிள்கள் மற்றும் மின்சார போர்டுகளில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டு தீ பாய்லருக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

மின் மாற்றியில் மீண்டும் தீ

இருந்தாலும் ஆலைக்கு மின்சாரத்தை வழங்கும் மின்மாற்றியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக, மீண்டும் தீப்பிடித்ததில், தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பில் இல்லாத இந்த ஆலையில், மின்மாற்றியில் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவது கடினமாக இருந்தது. மின்மாற்றியில் சுமார் 20,000 லிட்டர் எண்ணெய் இருப்பில் இருந்தால் தீயணையை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இருப்பினும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டுள்ளது. இதற்கு தீயணைப்பு வீரர்களின் ஒத்துழைப்பு மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பு முக்கிய காரணமாகும்" என்றார்.

தீ விபத்து ஏற்பட்ட அனல்மின் நிலையத்தில் சரியான பராமரிப்பு இல்லாததும் அனல் மின் நிலையத்திற்கென தனியாக தீயணைப்பு சாதனங்கள் இல்லாததுமே இந்த தீ விபத்து பெரிதாக காரணம் என சொல்லப்படுகிறது. இந்த குறித்து, புதியம்புத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் திணறல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.