ETV Bharat / city

பார்வையற்றோர் பயன்பாட்டிற்காக டேக்டைல் தொடு உணர்வு பாதை - நெல்லை ஆட்சியர் அசத்தல்

author img

By

Published : Sep 28, 2022, 4:35 PM IST

திருநெல்வேலியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக டேக்டைல் எனப்படும் தொடு உணர்வு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக டேக்டைல் எனப்படும் தொடு உணர்வு பாதை
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக டேக்டைல் எனப்படும் தொடு உணர்வு பாதை

திருநெல்வேலி: நீர்வளம், தாய்கேர் மையம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாகப் பல முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் யாருடைய துணையும் இன்றி பொது இடங்களான ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், மருத்துவமனை, கோயில்கள், சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களில் முக்கிய அலுவலர்கள் அறை மற்றும் கவுண்டர்களுக்கு செல்வதற்காக டேக்டையில் எனப்படும் தொடு உணர்வு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது போன்று நெல்லை மாவட்டத்தில் ஆட்சியரின் உத்தரவுப்படி பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வகையில் தொடு உணர்வு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் இந்த தொடு உணர்வு பாதைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

மேலும், தொடு உணர்வு பாதை அருகே அந்தந்த பகுதியின் உள்ள அலுவலர்களின் அறைகள் மற்றும் கவுண்டர்களில் பிரய்லி எழுத்துக்களுடன் கூடிய அக்ரலிக் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் அந்தந்த அலுவலர்களின் அறைகளுக்கு செல்வதற்கும் எளிதாக இருக்கும்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக டேக்டைல் எனப்படும் தொடு உணர்வு பாதை

இதுகுறித்து தொடு உணர்வு பாதை அமைக்கும் தணேஷ் கனகராஜ் கூறுகையில், “நெல்லை மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் அதிகம் வரும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், அவர்களுக்கான பயிற்சி மையம் ஆகிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓர் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவை மாவட்ட பி.எஃப்.ஐ அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.