ETV Bharat / city

மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ஜோதி ஓட்டம்..!

author img

By

Published : Sep 15, 2019, 11:10 PM IST

திருநெல்வேலி: மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், 54 கி.மீ., தூரம் செல்லும் விழிப்புணர்வு தொடர் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

awareness

மத்திய அரசின் திட்டங்களான போஷன் அபியான், ஜல் சக்தி அபியான், தூய்மை இந்தியா ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக போஷன் அபியான் திட்டத்தைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர் ஜோதி ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தொடர் ஜோதி ஒட்டம், நெல்லை - கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழியாக 54 கி.மீ., தூரம் பயணித்து வள்ளியூர் அருகே உள்ள கலந்தப்பணையில் நிறைவு பெறுகிறது.

awareness

ஒவ்வொரு 6 கி.மீ., தூரத்திலும் இந்தத் திட்டம் தொடர்பாக மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படும். இந்நிகழ்வில் அங்கன்வாடி பணியாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Intro:மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கலந்தப்பனை வரையிலான 54 கிமி தூரம் செல்லும் அளவிலான விழிப்புணர்வு தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.Body:மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கலந்தப்பனை வரையிலான 54 கிமி தூரம் செல்லும் அளவிலான விழிப்புணர்வு தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் திட்டங்களான போஷன் அபியான், ஜல் சக்தி அபியான், தூய்மை இந்தியா ஆகியவை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டுவருகிறது. தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு போஸன் அபியான் திட்டம் குறித்தும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை  மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக போஷன் அபியான் திட்டம் தொடர்பாக தொடர் ஜோதி ஓட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. தொடர் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். . நெல்லையில் தொடங்கிய தொடர் ஜோதி ஒட்டம் நெல்லை கன்னியாக்குமரி நெடுஞ்சாலை வழியாக வள்ளியூர் அருகே உள்ள கலந்தப்பணையில் நிறைவு பெறுகிறது.ஒவ்வொரு 6 கிமீ தூரத்திலும் இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மாணவ மாணவிகள் மூலம் செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் அங்கன்வாடி பணியாளர்கள் ,பள்ளி கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.