ETV Bharat / city

சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் 412 பேர் வேட்புமனு தாக்கல்

author img

By

Published : Mar 20, 2021, 12:57 PM IST

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்றுடன் (மார்ச் 19) வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 412 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

சேலம் சட்டப்பேரவைத் தொகுதி
சேலம் சட்டப்பேரவைத் தொகுதி

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 12ஆம் தேதிமுதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.

நேற்றுடன் (மார்ச் 20) வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 412 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

சேலம் 11 சட்டப்பேரவைத் தொகுதி

சேலம் தொகுதிவேட்புமனுத் தாக்கல்
கெங்கவல்லி (தனி)24
ஆத்தூர் (தனி)21
ஏற்காடு (எஸ்.டி.)24
ஓமலூர்38
மேட்டூர்73
எடப்பாடி48
சங்ககிரி35
சேலம் மேற்கு39
சேலம் வடக்கு36
சேலம் தெற்கு39
வீரபாண்டி35
மொத்தம்412

இதில், நாளை (மார்ச் 21) வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதையும் படிங்க: 'என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.