ETV Bharat / city

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை - சின்ன திருப்பதி கோயிலில் நடைபெற்ற பிரமோற்சவ விழா

author img

By

Published : Oct 6, 2019, 9:49 AM IST

சேலம்: புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையான நேற்று காருவள்ளி சின்னத்திருப்பதி அருள்மிகு பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி திருக்கோயிலில் பிரமோற்சவ விழா நடைபெற்றது.

Arulmiku Prasanna Venkataramana Swami Tirukovil Festival

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம் காருவள்ளி சின்னதிருப்பதியில் உள்ள பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி திருக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முழுவதிலும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த வருடமும் புரட்டாசி மாதத்தையொட்டி தினந்தோறும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையான நேற்று பிரமோற்சவ விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனையொட்டி காலை முதலே ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பிரசன்ன வெங்கட்டரமண சுவாமிகளுக்கும், ஆஞ்சநேயருக்கும் பால், நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

Arulmiku Prasanna Venkataramana Swami Tirukovil Festival was held
பெருமாளை வழிபட்ட பக்தர்கள்

இதையடுத்து, பல்வேறு நறுமண பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டதோடு, விலை உயர்ந்த ஆபரணங்கள் பிரசன்ன வெங்கட்டரமண சுவாமிக்குச் சாத்தப்பட்டுச் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இந்த வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதகராய் காட்சியளித்த பிரசன்ன வெங்கட்டரமண சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமிக்குப் பஜனைகள் பாடி தரிசனம் செய்து வழிபட்டனர்.

புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை என்பதால் பெங்களூரு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், பூஜைகளில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

காருவள்ளி சின்னதிருப்பதியில் நடைபெற்ற பிரமோற்சவ விழா

இதையும் படிங்க:மைசூரு தசரா கோலாகலமாகத் தொடக்கம்

Intro:காடையாம்பட்டி தாலுக்கா சின்னத்திருப்பதி பிரசன்ன வெங்கட்டரமண கோவிலில் பிரமோற்சவ விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ராமண சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. Body:
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையொட்டி நடைபெற்றசிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு பஜனைகள் பாடி சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா காருவள்ளி சின்னதிருப்பதியில் பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு தினமும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

மேலும், புரட்டாசி மாதம் முழுவதும் தினசரி கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிசேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதன்படி காருவள்ளி சின்னத்திருப்பதி அருள்மிகு பிரசன்ன வேங்கட்டரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிகிழமையை தொடர்ந்து பிரமோற்சவ விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனையொட்டி காலை முதலே ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்டரமண சுவாமிகளுக்கும், ஆஞ்சநேயருக்கும் பால், நெய்,தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு நறுமண பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டதோடு, விலை உயர்ந்த ஆபரணத்தில் பிரசன்ன வெங்கட்டரமண சுவாமிக்கு சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதகராய் காட்சியளித்த பிரசன்ன வெங்கட்டரமண சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமிக்கு பஜனைகள் பாடி தரிசனம் செய்து வழிபட்டனர்.

புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை என்பதால் பெங்களூரு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:
தொடர்ந்து பூஜைகளில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.