ETV Bharat / city

7 பேரின் விடுதலைக்கு உதவ வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் ரவிச்சந்திரன் மனு

author img

By

Published : Jan 23, 2020, 6:50 PM IST

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் பிரச்னையை தீர்க்க வேண்டும் என, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடசேனை சந்தித்து சிறைவாசி ரவிச்சந்திரன் மனு அளித்தார்.

Ravichandran petition
Ravichandran petition

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மதுரை சிறையில் சிறைவாசியாக உள்ள ரவிச்சந்திரன் 15 நாட்கள் சாதாரண விடுப்பில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள், சாதாரண உடையணிந்த காவலர்கள், பல்வேறு நுண்ணறிவுத் துறை பிரிவினரின் பாதுகாப்புடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு 28 ஆண்டுகள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். நான் உள்ளிட்ட ஏழு பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது என தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி 16 மாதங்களாகிவிட்டன. மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

Ravichandran petition
Ravichandran petition
எனது நீண்டகால சிறை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, தமிழ்நாடு அமைச்சரவை, ஆளுநருக்கு இடையிலான இணக்கமற்ற போக்கை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏழு பேரின் விடுதலைக்கு ஆவன செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் எடுத்துரைத்து மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து சட்டரீதியான எங்களது விடுதலைக்கு உதவிட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும்’ - ஜெயக்குமார் விமர்சனம்

Intro:ஏழு பேரின் விடுதலைக்கு உதவ வேண்டும்
- சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் ரவிச்சந்திரன் மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலுள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பான பிரச்சனையில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே நிலவும் கருத்துவேறுபாட்டினை தீர்த்து சட்டப்படியான விடுதலைக்கு உதவ வேண்டுமென சிறைவாசி ரவிச்சந்திரன் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடசேனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.Body:ஏழு பேரின் விடுதலைக்கு உதவ வேண்டும்
- சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் ரவிச்சந்திரன் மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலுள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பான பிரச்சனையில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே நிலவும் கருத்துவேறுபாட்டினை தீர்த்து சட்டப்படியான விடுதலைக்கு உதவ வேண்டுமென சிறைவாசி ரவிச்சந்திரன் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடசேனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

ராஜீவ்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் சிறைவாசியாக உள்ள ரவிச்சந்திரன் 15 நாள் சாதாரண விடுப்பில் அவர் விடுவிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் வியாழனன்று அவர் துப்பாக்கி ஏந்திய காவலர்கள், சாதரண உடையணிந்த காவலர்கள், காவல்துறையின் பல்வேறு நுண்ணறிவுதுறை பிரிவினரின் பாதுகாப்புடன் வந்து சு.வெங்கடேசனை சந்தித்தார்.

அப்போது அவர் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், அவர் 'ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகள் மத்திய மத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தமிழக அரசு நான் உள்ளிட்ட ஏழு பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது என தீர்மானம் நிறைவேற்றி 16 மாதங்களாகிவிட்டன.

மாநில அரசின் முடிவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை
எமது நீண்டகால சிறை வாழ்க்கையை முடிவிற்குக் கொண்டுவரும் பொருட்டு, தமிழக அமைச்சரவை, ஆளுநருக்கிடையிலான இணக்கமற்ற போக்கை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஏழு பேரின் விடுதலைக்கு ஆவண செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் எடுத்துரைத்து மத்திய-மாநில அரசுகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து சட்டரீதியான எமது விடுதலைக்கு உதவிட வேண்டுமென அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.