ETV Bharat / city

அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? மதுரையில் ஓபிஎஸ் பேட்டி

author img

By

Published : Oct 25, 2021, 4:59 PM IST

அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ்
செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ்

மதுரை: முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரையிலுள்ள தேசிய வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்கத்திலான கவசத்தைப் பெறுவதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்றிருந்தார்.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசியலிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; அதை ஏற்றுக்கொள்ளவது மக்களின் மனநிலையைப் பொருத்தது. அதிமுகவை எம்ஜிஆர் தொண்டர்கள் இயக்கமாக தான் தொடங்கினார். அதிமுக தொண்டர்களின் இயக்கமாகவே வளர்ந்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் செயல்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் பேசி முடிவு எடுப்பார்கள். அதிமுக மக்களுக்காக பல்வேறு சமூக திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதிமுக கொண்டு வந்துள்ள திட்டங்களை திமுக தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அத்திட்டங்களை திமுக நிறுத்தினால் மக்களை திரட்டி போராடுவோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ்

அமைதிப்பூங்கா

புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திமுக அரசு மிக அவசரப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகளை காழ்ப்புணர்ச்சியுடன் அழித்துவிட நினைக்கிறார்கள், திமுகவின் எண்ணம் நடக்காது. அதிமுகவில் அடிமட்ட தொண்டன் முதல் தலைவர் வரை அரசியல் நாகரீகத்துடன் செயல்படுகிறார்கள்.

திமுக அத்துமீறி செயல்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றால், அதிமுக அறப் போராட்டத்தில் ஈடுபடும். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்கியது. மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பொறுப்புகள் உள்ளன. பெட்ரொல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.15 கோடி கருவூல அலுவலகக் கட்டடங்கள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.