ETV Bharat / city

அமைச்சருக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள், இந்தாங்க 100 ரூபாய்!

author img

By

Published : Aug 28, 2020, 11:23 AM IST

மதுரை: முழு ஊரடங்கு உத்தரவையும் மீறி காவல் துறை முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுகவினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதோடு பணப்பட்டுவாடாவும் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

udhayakumar
udhayakumar

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்திவருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முழு ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் தெருமுனை பரப்புரை நடைபெற்றுள்ளது. அதிலும், இந்நிகழ்ச்சி வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆலங்குளம் கிராமத்தில் அதிமுகவினர் தடையை மீறி ஒலிப்பெருக்கிகள், மேடை அமைத்து தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்குவதும், அவருக்குப் பின்னால் வரும் அதிமுக நிர்வாகி ஒருவர் அவர்களிடம் 100 ரூபாய் வழங்குவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அமைச்சருக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள்... இந்தாங்க 100 ரூபாய்...

தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சட்டத்திற்குப் புறம்பாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், காவல் துறை, அமைச்சர் முன்னிலையில் வெளிப்படையாகப் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதும் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்நிகழ்வின் காட்சிப்பதிவு தற்போது வெளியாகி பெரும் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரம்: அமைச்சர் பாண்டியராஜ் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.