ETV Bharat / city

அதிமுக அரசு இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது - ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்!

author img

By

Published : May 23, 2020, 1:38 PM IST

மதுரை: நம்பிக்கையில்லை என்று சொன்னவர்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக அதிமுக அரசு திகழ்ந்து வருவதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

udhayakumar
udhayakumar

மதுரை மாவட்டம் பேரையூர், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் ஆகிய பகுதியிலுள்ள அதிமுக நிர்வாகிகள் 5000 பேருக்கு கரோனா நிவாரணமாக அரிசி, காய்கறி ஆகியவை அடங்கிய தொகுப்பினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுக அரசு இருக்குமா இருக்காதா என பலர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இந்த இயக்கத்தின் சின்னத்தை மீட்டெடுத்தார்கள்.

நம்பிக்கை இல்லை எனக் கூறியவர்களிடம், நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றி காட்டி இன்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் செல்வாக்கை, கட்சியின் செல்வாக்கை நிர்வாகிகள் அனைவரும் உயர்த்திக் காட்ட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அதிமுக கொடி பட்டம் போல் பறக்க வேண்டும். அதுதான் உழைப்பின் அடையாளம் “ என்று கூறினார்.

அதிமுக அரசு இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது

இதையும் படிங்க: 'தவறுதலாக அச்சொல்லைப் பயன்படுத்திவிட்டேன்' - மன்னிப்பு கோரிய திமுக எம்எல்ஏ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.