ETV Bharat / city

நவராத்திரியின் 2ஆம் நாள் - கோலாட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மீனாட்சி அம்மன்

author img

By

Published : Sep 27, 2022, 10:56 PM IST

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான இன்று (செப்-27)கோலாட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு மீனாட்சி அம்மன் காட்சியளித்தார்.

Etv Bharatநவராத்திரி 2ஆம் நாள் - கோலாட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு மீனாட்சி அருள்
Etv Bharatநவராத்திரி 2ஆம் நாள் - கோலாட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு மீனாட்சி அருள்

மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. வரும் அக்டோபா் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் போது நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இரண்டாம் நாள் விழாவான இன்று அம்மன் கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நவராத்திரி உற்சவ நாள்களில் மீனாட்சியம்மன் மூலவர் சன்னிதியில் அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனைகள் போன்றவை நடத்தப்படமாட்டாது என்பதால், கொலு மண்டபத்தில் (உற்சவர்) அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு தேங்காய் உடைப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டன.

நவராத்திரி விழாவையொட்டி திருக்கல்யாண மண்டபத்தில், பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கொலு அலங்கார பொம்மைகள் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகள் கொலு சாவடியில் கொலுவாக வைத்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்து கொலுவையும் பார்த்து ரசித்து சென்றனர்.

நவராத்திரி 2ஆம் நாள் - கோலாட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு மீனாட்சி அருள்

இதையும் படிங்க:தொடங்கியது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.