ETV Bharat / city

பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் அத்துமீறல் குறித்த மாணவியின் ஓவியம் - சமூக வலைத்தளங்களில் வைரல்

author img

By

Published : Jun 9, 2021, 7:35 AM IST

Updated : Jun 9, 2021, 12:20 PM IST

சென்னையிலுள்ள பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் அத்துமீறலைக் குறிக்கும் வகையில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி வரைந்த ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாணவி கீர்த்திகா, பாலியல் அத்துமீறலை எதிர்க்கும் ஓவியம், madurai student drawing about padma sheshadri sexual harrasement case, drawing about sexual harrasement case
madurai student drawing about padma sheshadri sexual harrasement case

மதுரை: மதுரை மாவட்டம், மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர், பேஷன் டெக்னாலஜி மாணவி கீர்த்திகா. இவர் சிறுவயது முதலே சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவர். மேலும், 'காபி ஆர்ட்' எனப்படும் காபி பொடியில் ஓவியம் வரைவதில் புகழ் பெற்றவர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பில், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவியின் கலை செயல்பாடு

மதுரை பேஷன் டெக்னாலஜி மாணவியின் வைரல் ஓவியம்

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவி கீர்த்திகா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியரின் செயலைக் கண்டிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஓவியம் ஒன்றை வரைந்து வெளியிட்டுள்ளார்.

அச்சம் தவிர் எனவும், ஆசிரியரின் குரூர செயலை விளக்கும் வகையிலும் வரைந்த அந்த ஓவியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல்ஆகி வருகிறது.

இதையும் படிங்க: கடும் விலை வீழ்ச்சியைச் சந்தித்த மதுரை மல்லிகை: உழவர்கள் வேதனை

Last Updated : Jun 9, 2021, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.