ETV Bharat / city

மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி பள்ளி கட்டண விலக்கு... துறை செயலர் பதிலளிக்க உத்தரவு...

author img

By

Published : Apr 1, 2022, 6:35 AM IST

Updated : Apr 1, 2022, 6:44 AM IST

மாற்றுத்திறனாளிகள் சட்டபடி பள்ளியில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிய மனு மீதான விசாரணையில்,மாற்றுத்திறனாளிகள் துறை செயலர், பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-hc
madurai-hc

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனது மகன் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஹீமோபோலியாவில் பாதிக்கப்பட்டு 60 சதவீதம் ஊனமாக உள்ளார். மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016இன் படி, 40 சதவீதத்திற்கு மேல் ஊனமாக உள்ள மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 6 முதல் 18 வயது வரை தனியார், அரசு உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் இலவசமாக கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் எனது மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதே பள்ளியில் தொடர்ந்து பயில உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு நேற்று (மார்ச் 31) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'வார்டு பாய்களுக்கு 1 மாதம் ஹெல்ப் பண்ணுங்க' - பைக் ரேஸ் இளைஞருக்கு பலே தீர்ப்பு

Last Updated : Apr 1, 2022, 6:44 AM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.