ETV Bharat / city

சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளிவைப்பு

author img

By

Published : Jan 28, 2022, 8:25 PM IST

சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளிவைப்பு
சேவல் சண்டை

மதுரை: தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த முத்து ராமன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா, அண்ணாமலை புதூர் பகுதியில் 2022 பிப்ரவரி 9ஆம் தேதியன்று சேவல் சண்டை போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு 2022 ஜனவரி 28ஆம் தேதி சேவல் சண்டை நடத்த திட்டமிட்டிருந்தோம்.

இரண்டு சேவல் சண்டை களமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சேவல் கால்களில் கத்தி போன்று கூர்மையான எந்த ஒரு பொருளும் பொருத்தப்படாமல் வெறும் கால்களில் சேவல் சண்டை நடத்தப்படும். சேவல் சண்டை நடத்தப்படும் இடத்தில் சேவல்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதனை சரிசெய்ய விலங்கியல் மருத்துவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு தள்ளி வைப்பு

தற்போது சில நாள்களுக்கு முன்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சேவல் சண்டை நடத்த அலுவலர்கள் அனுமதி அளிக்கவில்லை. எனவே, சேவல் சண்டை போட்டிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வில் 2022 ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டை போட்டிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

எனவே, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் இந்த வழக்குகளை யார் முன்பு பட்டியலிட வேண்டும் என பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவு மீதான நிலஅபகரிப்பு புகார்- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.