ETV Bharat / city

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு!

author img

By

Published : Mar 8, 2021, 12:42 PM IST

மதுரை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக வயது நிர்ணய தகுதியை நீக்கி, புதிதாக அறிவிப்பு வெளியிடக்கோரிய வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

trb
trb

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பில், 40 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு இல்லாத நிலையில், தற்போது புதிதாக வரம்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது இயற்கை விதிகளுக்கும் எதிரானது.

அதோடு இதன் காரணமாக முறையாக பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வாய்ப்புள்ளதால், மாணவர் சமுதாயமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். ஆகவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பிப்ரவரி 11 இல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கார் ஓட்டுநர்களுக்கு தபால் வாக்கா? - உயர் நீதிமன்றம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.