ETV Bharat / city

இறைவன் முன் அனைவரும் சமம்.. யாருக்கும் முதல் மரியாதை கிடையாது...

author img

By

Published : Sep 20, 2022, 7:51 AM IST

இறைவன் முன் அனைவரும் சமம் என்றும் கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பையா, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் ஊரில் பராம்பரியமிக்க பராசக்தி அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலில் வரும் 21ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதனிடையே சிலர் முதல் மரியாதை கோருகின்றனர்.

இதனால் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அவர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இறைவன் முன் அனைவரும் சமம்.

இறைவனை வழிபடுபவது தான் நோக்கமாக இருக்க வேண்டும். இறைவன் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது. ஆகவே யாருக்கும் முதல் மரியாதை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன்... உங்கள் ராசிக்கு எப்படி..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.