ETV Bharat / city

சாத்தான்குளம் வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

author img

By

Published : Aug 30, 2022, 7:47 AM IST

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

சாத்தான்குளம் வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சாத்தான்குளம் வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி செல்வராணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் 6 மாதத்திற்குள் விசாரணை முடிக்கப்படவில்லை என்று கூறி, வழக்கு விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி வேண்டும் என்று மதுரை விசாரனை நீதிமன்றம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் 5 மாத கால கூடுதல் அவகாச வழங்கி உத்தரவிட்டது.

இருப்பினும் வழக்கு முடிக்கப்படவில்லை. ஆதலால் இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நீதிமன்றம் தரப்பில், மொத்தம் உள்ள 105 சாட்சிகளில் 55 முதல் 60 சாட்சிகளே முக்கியமானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாரத்திற்கு 2 நாட்கள் வழக்கு கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

குற்றவாளிகளாகக் கருத்தப்படும் 9 நபர்களின் வழக்கறிஞர்களும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதால், காலதாமதம் ஏற்படுகிறது. எனவே 4 மாத கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதி, 4 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்... 4 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.