ETV Bharat / city

தொழில்நுட்ப கோளாறு; தேர்வெழுத முடியாமல் மாணவர்கள் தவிப்பு

author img

By

Published : Aug 30, 2020, 4:16 PM IST

மதுரை: தேசிய கட்டட வரைகலை மாணவர்களுக்கான (NATA) நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவித்தனர்.

Delay of examination by two hours due to technical glitch in NATA entrance examination
Delay of examination by two hours due to technical glitch in NATA entrance examination

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்காவிற்குட்பட்ட பொட்டல்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தேசிய கட்டட வரைகலை மாணவர்களுக்கான (NATA) நுழைவுத் தேர்வு நேற்று (ஆகஸ்ட் 29) பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி 2.30க்கு முடிவடைய இருந்த நிலையில், ஆன்லைன் தேர்வுக்கு வந்த 80 பேரின் கணினியில் முறையாக இன்டர்நெட் வசதி கிடைக்காததால் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத முடியாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதம் ஏற்பட்டது.

மேலும், இடையில் மின்தடை ஏற்பட்டதால் தேர்வு எழுத இடையூறாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தேர்வு எழுத வந்த 80 மாணவர்கள், பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஒரு மணி நேரத்திற்கு பிறகு இணையதள கோளாறு சரி செய்த பின் தேர்வு எழுதினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.