ETV Bharat / city

புலிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு முதல் பரிசு

author img

By

Published : Jan 26, 2022, 11:58 AM IST

உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருதான டிஎக்ஸ்2 (TX2) என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.

TX2 Award for sathyamangalam tiger reserve, சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்திற்கு டிஎக்ஸ்2 விருது
TX2 Award for sathyamangalam tiger reserve

ஈரோடு: நீலகிரி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 1,455 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம், 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அப்போது சுமார் 30 புலிகள் இருந்ததாக அப்போதையை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அடர்ந்த காடு, நீரோடைகள், புலிகள் வாழ்வதற்கான தட்பவெப்பநிலை கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையொட்டி முதுமலை, பந்திப்பூர், பிஆர்ஹில்ஸ், ஈரோடு மற்றும் கோவை வனப்பிரிவு, மலை மதேஸ்வரர் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளதால் புலிகள் எளிதாக பிற இடங்களுக்கு புலம் பெயர்ந்து இரை தேடியும் புதிய எல்லையை பிரவேசிக்கவும் இயலுகிறது.

13 அமைப்புகள் சேர்ந்த கூட்டமைப்பு

இதனால், புலிகள் எண்ணிக்கை தற்போது இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு 30 புலிகளாக இருந்த காப்பக்கத்தில் தற்போது 80 புலிகள் உள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் புலிகளை பாதுகாப்பதற்கு ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, வங்கதேசம் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள கன்சர்வேஷன் அண்டு டைகர் ஸ்டேன்டேடு (Conservation Assured Tiger Standards), வேல்டு லைப் கன்சர்வேஷன் ஆப் சொசைட்டி (Wildlife Conservation of Society), உலகளாவிய நிதியகம் என 13 அமைப்புகள் சேர்ந்து ஓர் கூட்டமைப்பினை ஏற்படுத்தியுள்ளன.

இந்த கூட்டமைப்பு 2010ஆம் ஆண்டு, 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இரு மடங்காக உயர்த்திய நாட்டுக்கு டிஎக்ஸ்2 (TX2) எனும் சர்வதேச விருது வழங்கப்படும் என இக்கூட்டமைப்பு அறிவித்தது.

நோபாளம் இரண்டாமிடம்

இதன்படி, சர்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியதற்காக டிஎஸ்2 என்ற விருதை முதல் பரிசாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கும், இரண்டாவது விருதாக நேபாளம் பார்டியா தேசிய பூங்காவுக்கும் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு, வனத்துறையின் முயற்சி பழங்குடியின மக்களின் ஆதரவு போன்றவற்றால் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தாண்டு கரோனா தொற்று காரணத்தினால், இந்த விருதை காணொளி வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு கூட்டமைப்புகள் வழங்குகின்றன. இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கிருபா சங்கர் கூறுகையில், "சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு இந்த விருது பெரிய அங்கீகாரம். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் எங்களுக்கு கிடைக்கும். இந்த விருது பெற காரணமாக இருந்த இப்பகுதி மக்கள், வனத்துறை மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கு நன்றி" என்றார்.

இதையும் படிங்க: Padma awards 2022: பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷண், சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.