ETV Bharat / city

பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

author img

By

Published : Nov 13, 2019, 10:56 AM IST

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரிநீரானது பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

water level rise in Bhavanisagar Dam

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை அடுத்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் உபரிநீர், காரமடை பள்ளம், கொடநாடு வெள்ளநீர் ஆகியவை மேட்டுப்பாளையம் பவானி ஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு வந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து மாயாற்று நீரும் பவானிசாகர் அணைக்கு வருவதால் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

மேலும் பவானிஆற்றில் உபரிநீர் திறந்துவிடும்போது தாழ்வான பகுதியில் குடியிருப்போர் வெள்ளநீரால் பாதிக்கப்படுவர் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் நகராட்சி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அணைக்கு நீர் வரத்து அதிகமாக வரும் நிலையில் வருவாய், உள்ளாட்சி, நகராட்சித் துறைக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது.

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு

பவானிகரையோரம் உள்ள எஸ்.டி. பணிமனை சந்து, முனியப்பன் கோவில் வீதி, மத்திமரத்துறை. பிள்ளையார் வீதி, முனியப்பன் வீதி, ஐயப்பன் கோவில் வீதி, சின்ன வீதி ஆகிய பகுதிகளில் ஒலி பெருக்கி, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

வெள்ளநீரால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு, திருமண மண்டபங்கள், பள்ளிகள், சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்: ராஜேந்திர பாலாஜியின் அடுத்த அதிரடி!

Intro:Body:tn_erd_06_sathy_flood_alert_vis_tn10009

பவானிசாகர் அணை உபரிநீர் 10 200 கனஅடி திறக்கப்படுவதால்
தாழ்வான பகுதியில் குடியிருப்போருக்கு நகராட்சி, வருவாய் துறை வெள்ளஅபாய எச்சரிக்கை

பாதிக்கப்பட்டோர் திருமண மண்படங்கள்,பள்ளிகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்க முன்ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை அடியை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் பவானிஆற்றில் திறந்துவிடப்படுகிறது.இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் உபரிநீர், காரமடை பள்ளம், கொடநாடு வெள்ளநீர் ஆகியவை மேட்டுப்பாளையம் பவானிஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு வந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ள்ளவான 105 அடியை எட்டியுள்ளது. மாயாற்று நீரும் பவானிசாகர் அணைக்கு வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைக்கு வரும் 10 ஆயிரம் கனஅடி உபரிநீர், அணையின் மேல்மதகில் உள்ள 9 மிகைநீர் போக்கி வழியாக பவானிஆற்றில் திறந்துவிட்டப்பட்டது.

பவானிஆற்றில் உபரிநீர் திறந்துவிடும் போது வெள்ளநீரால் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதிக்கப்படுவர் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சத்தியங்கலம் நகராட்சி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்திற்குசெல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அணைக்கு நீர் வரத்து அதிகமாக வரும் நிலையில் வருவாய், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறைக்கு அவ்வவ்போது தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் ஆற்றில் குளிக்கவே, துவைக்ககூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பவானிகரையோரம் உள்ள எஸ்.டி. பணிமனை சந்து, முனியப்பன் கோவில் வீதி, மத்திமரத்துறை. பிள்ளையார் வீதி, முனியப்பன்வீதி, ஐயப்பன் கோவில் வீதி, சின்னவீதி ஆகிய பகுதியில் ஒலி பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். வெள்ளநீரால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் சிறப்பு முகாங்கள் அமைக்கப்பட்டு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

இரவு 10 மணி நிலவரப்படி: 105 அடி நீர்மட்ட உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் நீர்வரத்து 10200 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 10200 கனஅடியாகவும் நீர் இருப்பு 32.80 டிஎம்சியாக உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.